நடிகர் விசு காலமானார்

எழுத்தாளர், இயக்குநர், நாடக நடிகர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் விசு. 1945 ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுப்பெயர் எம்.ஆர். விஸ்வநாதன்.

இவர் முதன்முதலில் பாலசந்தரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு அந்தப் படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குநராக அறிமுகமாகினார்.மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ்த்திரையுலக்குக் கொடுத்தார் விசு. இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் மத்திய அரசின் தங்கத்தாமரை விருது பெற்ற படம்.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 72 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

பின்னாளில் வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.இன்று மாலை 5.30 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 75.

Leave a Response