தூக்குத்தண்டனை வன்முறை மட்டுமே நீதி அல்ல – பெண் இயக்குநர் கருத்து

டிசம்பர் 16, 2012 அன்று தில்லியில் மருத்துவ மாணவி, நிர்பயா தன் நண்பருடன் இரவில், தனியார் பேருந்தில் பயணம் செய்த போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு,பேருந்தில் இருந்து துாக்கி வீசப்பட்டார்; நண்பரும் தாக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.

ஏழாண்டுகளுக்குப் பின்பு நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும், இன்று(மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு, திகார் சிறையின் 3 ஆம் எண் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் லீனாமணிமேகலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்களைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் நான் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன், அவர்களின் போராட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் மரியாதை எனக்கு உண்டு. மரண தண்டனை என்பது வன்முறை கலாச்சாரத்தை மட்டுமே பரப்புகிறது, நீதி அல்ல.

என்று பதிவிட்டிருக்கிறார். அதொடு மரணதண்டனையை எதிர்க்கிறேன் என்கிற குறிச்சொல்லையும் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Response