20 ஆண்டுகளாக அசைக்க முடியாதவராக விளாடிமிர் புதின் இருப்பது எப்படி?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். அதிபர், பிரதமர் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் அதிகார சிகரத்தில் இருக்கிறார்.

ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் உயர் பொறுப்பில் இருந்தவர்.ஜோசப் ஸ்டாலினுக்குப் பின், நீண்ட காலமாக பதவியில் இருப்பவர்.

1997 இல், போரிஸ் எல்சின் பிரதமராக இருந்தபோது, கிரம்ளின் மாளிகையில் நுழைந்தார். அவரை எப்.எஸ்.பி., என்ற உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக நியமித்தார் எல்சின்.

1999 இல், எல்சின் பதவியை ராஜினாமா செய்தபோது, ரஷ்யாவின் இடைக்கால பிரதமரானார் புடின். 2000 ஆம் ஆண்டு அதிபரானார். 2008 ஆம் ஆண்டு வரை, இரு முறை அதிபராக இருந்தார்.தனது கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, எதிராளிகளே இல்லை என்ற நிலையில், மூன்றாவது முறை அதிபராக தேர்வாக, அந்நாட்டு அரசியல் சட்டம் குறுக்கே நின்றது.

எனினும், தனது அரசியல் சீடர் டிமித்ரி மெத்வதேவ் என்பவரை அதிபராக நியமிக்க ஏற்பாடு செய்தார்.அப்போதும் அதிகாரத்தை விட்டுத்தராமல், பிரதமராக புடின் பதவியேற்றார்.

பின், 2012 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தைத் திருத்தி, மூன்றாவது முறையாக அதிபரானார். அதிபர் பதவிக்காலம் நான்கில் இருந்து, ஆறு ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டது.

2018 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின், மீண்டும் நான்காவது முறையாக அதிபராகி உள்ளார். அவரது பதவிக்காலம், 2024 இல் தான் நிறைவடைகிறது.

தற்போது, 67 வயதாகும் புடின், அதற்கு பின்னரும் ஆயுள் வரை அதிபர் என்ற இலக்குடன், ரஷ்யாவில் அசைக்க முடியாதவராகத் திகழ்கிறார்.

இவர் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையகப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியைச் சுவைக்கிறார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

Leave a Response