இராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்

நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து தெய்வங்களை இழிவுபடுத்துகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பாகக் கடும் மோதல்கள் நடந்தன.

இந்நிலையில், இந்தச்சிக்கலில் மருத்துவர் இராமதாசு என் பக்கம் இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் அட்டூழியங்களைத் தடுக்க அவருடைய ஆதரவை வேண்டுகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

இதற்கு நிறையப் பேர் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

பார்ப்பனீயத்தின் வேலையே இதுதான், நமக்குள் மோதலை ஏற்படுத்தி அவர்கள் குளிர்காய்வார்கள். அதைத்தான் காயத்ரி ரகுராமும் செய்கிறார் என்று சொல்லிவருகிறார்கள்.

அவர்கள் சொல்வது போலவே, மருத்துவர் இராமதாசு, இச்சிக்கல் குறித்து எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அப்படியிருக்கும்போது அவர் எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று காயத்ரிரகுராம் சொல்லியிருப்பது எப்படி? என்று தெரியவில்லை.

Leave a Response