மகாராஷ்டிராவில் வெற்றி ஆனாலும் 17 தொகுதிகளை இழந்த பாஜக

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணித்த நிலையில், கடந்த முறை 122 தொகுதிகளை வென்ற பாஜக தற்போது 105 தொகுதிகள் மட்டுமே வென்றுள்ளது.

இதனால் 2014ல் வென்றதைவிட பாஜகவின் வெற்றி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளுக்கு மேல் குறைந்துள்ளது,

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிளில் வென்றுள்ளது.2014 இல் அக்கட்சி 63 இடங்களில் வென்றிருந்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சி 54 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response