ரூ 2000 நோட்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார் மோடி.

அதற்குப் பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2000 புதிய நோட்டுகள் அச்சடித்து பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டது

இந்த நிலையில் கறுப்புப்பண முதலைகள் ரூ.2000 நோட்டை அதிகமாகப் பதுக்குவதாக வெளிவந்த தகவலை அடுத்து ரூ.2000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தபட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.அதில், 2019-2020 ஆம் நிதியாண்டில் ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Leave a Response