இடைத்தேர்தலில் நாம் தமிழர் சீமான் பரப்புரை – முழு விவரம்

அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான், தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.

அவருடைய பரப்புரைப் பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

நாள் – பரப்புரை மேற்கொள்ளும் தொகுதி
05-10-2019 சனிக்கிழமை – விக்கிரவாண்டி
07-10-2019 திங்கட்கிழமை – நாங்குநேரி
11-10-2019 வெள்ளிக்கிழமை – விக்கிரவாண்டி
12-10-2019 சனிக்கிழமை – விக்கிரவாண்டி
14-10-2019 திங்கட்கிழமை – நாங்குநேரி
15-10-2019 செவ்வாய்க்கிழமை – நாங்குநேரி
16-10-2019 புதன்கிழமை – புதுச்சேரி – காமராஜ் நகர்
17-10-2019 வியாழக்கிழமை – விக்கிரவாண்டி
18-10-2019 வெள்ளிக்கிழமை – நாங்குநேரி

முதலாம் நாளான 05-10-2019 சனிக்கிழமை, மாலை 05 மணியளவில், விக்கிரவாண்டி வேட்பாளர் கு.கந்தசாமியை அறிமுகப்படுத்தும் அறிமுகப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் விக்கிரவாண்டி வட்டாச்சியர் அலுவலகம் அருகில் நடைபெறவிருக்கின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response