இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவுக்கு சிக்கல்

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களைப் பெற்றுவிட்டு அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இந்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியினால் அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மிண்டர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ளார் விஜய்மல்லையா.அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இலண்டனில் நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மட்டைப்பந்துப் போட்டியைக் காண ஓவல் மைதானத்திற்கு விஜய் மல்லையா வருகை தந்திருந்தார்.

போட்டி முடிந்து வெளியில் வந்த அவரை சூழ்ந்து கொண்டு திருடன் என இந்தியர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

Leave a Response