8 இலட்சம் 3 இலட்சம் – மோடியை முந்திய ராகுல்

உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் ஷாலினி யாதவ், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில், பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்ற முறை இதே தொகுதியில் 3.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

8 லட்சத்து 38 ஆயிரத்து 371 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததன் மூலம் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்கிற பெருமையைப் பெறுகிறார் ராகுல்காந்தி.

Leave a Response