மோடி பற்றிய ராகுல் ட்வீட் – பற்றியெரியும் பரபரப்பு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. பெரும்பாலும் இந்த தேர்தல்கள் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என மொத்தம் 51 தொகுதிகளில் நாளை (6-ந் தேதி) தேர்தல் நடக்கிறது.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிற 14 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது.

ஒன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வென்ற ரேபரேலி, மற்றொன்று அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வெற்றி பெற்ற அமேதி.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ரேபரேலியில் சோனியா காந்தி பிரசாரம் செய்யாதபோதும் அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமேதியில் ராகுல் காந்திக்கும், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

நாளை அங்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில்.

மோடிஜி போர் முடிந்துவிட்டது. நீங்கள் செய்த பாவங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. நீங்கள் கற்பனையாக என் அப்பா மீது சுமத்தும் குற்றம் உங்களைப் பாதுகாக்காது.

உங்களுக்கு என் அன்பும் அரவணைப்பும்

என்று டிவிட்டரில் காட்டமாக விமர்சித்துள்ளார் ராகுல்காந்தி.

இது வட இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response