திருப்பூர் முதலிடம் ஈரோடு இரண்டாமிடம் – 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் – 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் – 19 ஆம் தேதி முடிவடைந்தது.

அந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து திட்டமிடப்பட்டபடி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதியவர்களில் 91.03 விழுக்காடு பேர் தேர்வாகியுள்ளனர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகஅளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 விழுக்காடும், மாணவர்கள் 88.57 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் பார்க்கும்போது,

திருப்பூர் முதலிடம்: 95.37 விழுக்காடு
ஈரோடு 2-வது இடம் 95.23 விழுக்காடு
பெரம்பலூர் 3-வது இடம் 95.15 விழுக்காடு

மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 5.07 விழுக்காடு அதிகம்

தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.

Leave a Response