டிடிவி. தினகரன் திடீர் வியூகம் – கதிகலங்கும் அதிமுக

2019 நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி.தினகரனின் அ ம மு க தனித்துப் போட்டியிடுகிறது.

இந்தத் தேர்தலில் பெருமளவு வாக்குகளைப் பெற்றால்தான் அதிமுக வை முழுமையாக்க் கைப்பற்ற முடியும் என்பதை உணர்ந்திருக்கும் தினகரன், அதற்காக அதிரடி வியூகம் வகுத்திருக்கிறாராம்.

அது என்ன?

இந்தமுறை அதிமுகவினர் தொகுதி முழுக்க ஓட்டுக்குப் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனராம்.

அவர்கள் தீவிர அதிமுகவினரைக் கணக்கிலெடுக்காமல் பொதுவான மற்றும் பலவீனமான கட்சி ஆட்களைக் குறிவைத்துப் பணம் கொடுப்பார்கள்.

எனவே அதற்கு மாற்றாக தீவிர அதிமுகவினரைச் சந்தித்து அவர்களுக்குப் பெருமளவில் நம்பிக்கை கொடுத்து அதோடு பணமும் கொடுப்பது என்று திட்டமிட்டிருக்கிறதாம் தினகரன் அணி.

அதிமுகவின் ஓட்டு வங்கியில் பெருமளவைக் கைப்பற்றிவிட்டாலே போதும். அதுவே அதிமுக கூட்டணியின் தோல்விக்கும் அ ம மு க வின் பலத்தைக் காட்டுவதற்கும் பயன்படும் என்று சொல்லியிருக்கிறாராம் தினகரன்.

இதற்காக ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு பதினைந்து முதல் இருபது கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தத் தகவல் அறிந்த திமுகவினர் கதிகலங்கிப் போயிருக்கிறார்களாம்.

இதை எப்படி முறியடிப்பது என்கிற ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறதாம்.

Leave a Response