ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி

ஆஸ்திரேலிய மட்டைப்பந்தாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை
2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தொடங்கியது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 81 தோனி 59 கோலி 44 ரன்கள் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Leave a Response