கமல் பாரிவேந்தர் கூட்டணி உருவாகுமுன்பே முறிந்தது ஏன்?

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பிரதானமாக இருக்கின்றன.

இக்கூட்டணியில் இடம் பெற முடியாத சிறிய கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடலாம் என்கிற கருத்தின் அடிப்படையில் சில வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று, நடிகர் கமல் எடுத்த முயற்சி.
அவர், தனது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து போட்டியிட சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

அதற்காக அவர் தொடர்பு கொண்ட கட்சிகளில் ஒன்று பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி. இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவிருப்பதாகச் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தன.

உறுதியான செய்தியாக அது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், பாரிவேந்தர் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று அறிவித்துவிட்டார்.

கமலுடனான பேச்சு முறிந்தது ஏன்? என்ற கேள்விக்கான விடையாக உலாவரும் செய்தி என்ன தெரியுமா?

தேர்தலில் ஆளுக்கு எவ்வலவு தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்று பேசுவதற்கு முன்னால் எல்லாத் தொகுதிகளுக்குமான தேர்தல் செலவை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும், நான் பரப்புரை செய்கிறேன் என்று கமல் கூறினாராம்.

இவர் நம்மைக் கூட்டணிக்குக் கூப்பிடவில்லை செலவு செய்யக் கூப்பிட்டிருக்கிறார் என்பதை உணர்ந்த பாரிவேந்தர், சொல்லாமல் கொள்ளாமல் திமுக அணிக்கு ஆதரவு என்று அறிவித்துவிட்டாராம்.

இதனால் கமல் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response