சண்டை முடிந்தது மீண்டும் அதிமுக அணியில் இணைந்தது புதியதமிழகம்

அதிமுக பாஜக கூட்டணியில் தொடக்கத்திலிருந்து இடம்பெற்றிருந்தது புதிய தமிழகம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் வந்ததால் திடீரென அதிமுக கூட்டணிக்கு எதிராகப் பேசித் தொடங்கினார் கிருஷ்ணசாமி.

அவரை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தன. அது வெற்றி பெற்றுள்ளது.

இப்போது, மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக தலைமையகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதிமுக – புதிய தமிழகம் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்படி கிருஷ்ணசாமி ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இரட்டை இலை இல்லாமல் சொந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response