எச்.ராஜா மீது என்ன நடவடிக்கை? – சுபவீ காட்டம்

செப்டம்பர் 15 மாலையிலிருந்தே பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் காணொலி பதிவொன்று வேகமாக இணையத்தில் வருகிறது. அதனை கைபேசி ஒன்றில் படம் பிடித்திருக்கிறார்கள்.

அதில் காவல்துறை அதிகாரிகளிடம் எச்.ராஜா, “பயங்கரவாதிகளுக்கு ஜெயிலுக்குள் 19 கலர் டிவி, வெட்கமில்லையா உங்களுக்கு காக்கிச்சட்டை அணிவதற்கு. வெட்கமாயில்லை. ஒட்டுமொத்த காவல்துறையுமே தமிழ்நாட்டில் ஊழல்மயமாகிவிட்டது. நான் எப்படி கீழே நின்று பேசுவது, எனக்கு மேடை வேண்டும்.

உங்களுக்கு லஞ்சம் தேவை என்றால் என்னிடம் கேளுங்கள். நான் தருகிறேன். எல்லாருமே லஞ்சப் பேர்வழிகள். புழல் ஜெயலுக்குள் எப்படி கலர் டிவி எல்லாம் சென்றது. எல்லாத்துக்குமே லஞ்சம், லஞ்சம், லஞ்சம். இங்கு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சாமியானா போடுவதை தடுக்கிறீர்கள்” என்று பேசுகிறார்.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி, “இது ஹைகோர்ட் உத்தரவு சார்” என்றவுடன், எச்.ராஜா தகாத வார்த்தைகளால் ஹைகோர்ட்டை சாடியுள்ளார். இந்த காணொலி தான் தற்போது ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுப.வீரபாண்டியன் “”ஹைகோர்ட்டாவது மயிராவது ” என்று பேசியுள்ள எச்.ராஜாவின் மீது என்ன நடவடிக்கை? இது நீதிமன்றஅவமதிப்பு இல்லையா? ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என்று தெரிவித்திருக்கிறார்.

சுபவீ மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் எச்.ராஜாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். இதனால் எச்.ராஜா கைதாவார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response