ஓவியாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு – உணர்வாளர்கள் வேதனை

தமிழீழ விடுதலைப் போரில் சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை இழந்து, இப்போதும் தொடரும் திட்டமிட்ட இனஅழிப்பு சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் – ஈழத்தமிழர்கள் நடிகை ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்துள்ளனர்.

சிங்களத் தலைநகர் கொழும்பு மாநகரின் செட்டித்தெருவில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஓவியாவைக் காண பெரும் கூட்டம் திரண்டுள்ளது. நகை வாங்கினால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோர் நடிகை ஓவியாவுடன் சாப்பிடலாம் என்பதற்காகவும் பலர் நகை வாங்க முட்டிமோதியுள்ளனர்!

சிங்களப் பேரினவாதிகளுடனான 30 வருட போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, கண், கை கால்களை இழந்து ஒரு நேர உணவுக்கு முன்னாள் போராளிகளும் மக்களும் அவதிப்படும் நிலையில் ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Response