பிக்பாஸ் 2 குழுவின் கடைசி முயற்சி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேரில், இப்போது இருப்பது பாலாஜி, மும்தாஜ், ரித்விகா, ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய ஏழு பேர் மட்டுமே!

85 நாட்கள் கடந்துவிட்டன ஆனாலும் பிக்பாஸ் 1 போல பிக்பாஸ் 2 சுவாரஸ்யம் இல்லை என்பது பரவலான கருத்தாகி இருக்கிறது.

இதை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போது, கடைக்குட்டி சிங்கம் டீம், கஜினிகாந்த் டீம் என்று பலரும் ஒவ்வொரு விதமாக, வேறு வேறு மாதிரியாகச் சொன்னது. நடிக்கிறீங்க, பொய்யா இருக்கீங்க, இயல்பாவே இல்லை என்றெல்லாம் சொன்னார்கள்.

இதனிடையே, டேனியல், சென்றாயன் என கலகலப்புப் பார்ட்டிகளும் வெளியேற அதுவும் சர்ச்சையானது.

இந்த நிலையில், ஏதேனும் செய்யவேண்டும் எனும் நோக்கில், வையாபுரி, காயத்ரி ரகுராம், சினேகன், சுஜா, ஆர்த்தி என ஐந்து பேர் உள்ளே வந்திருக்கிறார்கள்.

மேலும் பிக்பாஸ் டைட்டில் நாயகன் ஆரவ்வும் உள்ளே வந்திருக்கிறார். போதாக்குறைக்கு பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் பாதியை அடிக்கடி க்ளிப்பிங்க்ஸ் போட்டுக் காட்ட, அது வெகுவாகவே நேயர்களைக் கவர்ந்திருக்கிறது. ஆக பிக்பாஸ் 2 வை பிரபலப்படுத்த பிக்பாஸ் 1 தேவைப்படுகிறது.இந்த கடைசிக்கட்ட முயற்சி அவர்களுக்குப் பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response