இடிந்தகரை, ஈழம் குறித்த கடல்குதிரைகள் படம் – தடைகளை உடைத்து வெளியாகிறது

தமிழீழ விடுதலைப் போரை மையமாகக் கொண்ட ‘காற்றுக்கென்ன வேலி’ ‘உச்சிதனை முகர்ந்தால்’ ஆகிய திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல் குதிரைகள்.’

இப்படம், 5 மாணவிகளை மையமாகக் கொண்ட கதையைக் கொண்டது.ஐந்து நீச்சல் வீராங்கனைகள் கதையின் நாயகிகள்.

கூடங்குளம் இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்த போராட்டக் களம் கதைக் களமாக எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாணவிகளில் நீச்சல் விளையாட்டு தேசியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் நிலையில் அவர்களுள் ஒருத்தியான கிரிசாந்தி குமாரசாமி ஈழத்துப் பெண் என்பதால் அவர்களின் வெற்றி ஏற்றுக் கொள்ளப்பட மறுக்கப்படுகின்றது.

2000 மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் அந்நியர்களை எல்லாம் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வணக்கம் சொல்லி வரவேற்கின்றது. நாமும் சகோதரர்கள் என ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் 20 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த எம் தமிழ் உறவுகளை நாம் மதித்து போற்றி எம் தமிழக மண்ணின் மக்கள் போல் விளையாட்டுக் கலைகள் படைக்க படிக்க தடை போடுகின்றார்கள். என்ன நியாயம் இது? என்ற ஆதங்கமும் கோபமுமே இந்தப் படம்.

கிருசாந்தி என்ற பாத்திரத்தில் பிரசாந்தி என்பவர் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தலைவாசல் விஜய், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க தணிக்கைத்துறை மறுத்துவிட்டதாம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சான்றிதழ் பெற்றுவிட்டார்கள்.

அனைத்துத் தடைகளையும் உடைத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது என்று இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அறிவித்திருக்கிறார்.

Leave a Response