விஜய்யின் சர்கார் பட விவகாரம் – திமுக பாமக கடும் மோதல்

சர்கார் படத்தின் முதல்பார்வையில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது.
பசுமைத் தாயகம் அமைப்பினர் அது பற்றிப் புகார் கொடுத்தனர்.

அதனால், பொது சுகாதாரத்துறை சர்கார் படக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுத்தது.

அதையடுத்து அந்தப்படத்தை திரும்பப் பெற்றது படக்குழு.

ஆனாலும் சிக்கல் அதோடு முடியவில்லை, பாமகவினருக்கு எதிராக குடிசை கொளுத்தி பாமக என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி பாமகவினரை வறுத்தெடுத்தார்கள்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சிகரெட் கொளுத்தி விஜய் என்கிற ஹேஷ்டாக்கை உருவாக்கி விஜய்க்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இது ஜூலை 7 அன்று நடந்து முடிந்தது. ஆனால்,
விசயம் அதோடு முடியவில்லை.

விஜய் ரசிகர்கள் என்கிற பெயரில் திமுகவினர்தான் பாமகவை திட்டினர் என்கிற காரணத்தைச் சொல்லி பாமக சார்புடையோர்,இன்று (ஜூலை 8 ) திருட்டு திமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி திமுகவை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இச்சிக்கல் இதோடு முடியுமா? அல்லது இன்னும் தொடருமா? என்பது தெரியவில்லை.

Leave a Response