
உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நிஷ்னி நவ்கோரோட் மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் அபாரமாக செயல்பட்ட சுவீடன் வீரர் கிரான்குவிஸ்ட் முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார்.
இறுதிவரை தென் கொரியா அணியினரால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
இதன் மூலம் தென்கொரியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணி வெற்றிபெற்றது.


