நீட் குளறுபடி பற்றிய ரஜினியின் கருத்து இதுதான்

தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலர் கராத்தே தியாகராஜன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்.

சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதனையடுத்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த கராத்தே தியாகராஜன் கூறியதாவது:

ரஜினி எனக்கு நல்ல சகோதரர், அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கம்தான். அரசியல் தொடர்பாக பேசினோம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ரஜினி கட்சி தொடங்கி விடுவார். அடிக்கடி அவரைச் சந்தித்தால் கட்சியில் சேரப்போவதாக அர்த்தமா? நான் காங்கிரஸ் கட்சிக்காரன், ரஜினி தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த தலைவராக வருவார்.

1996-லிருந்தே ரஜினி முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார், ஆனால் டிடிவி தினகரன் 2008ம் ஆண்டு ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களிலிருந்துதான் கருத்து கூறி வருகிறார்.

ஏற்கெனவே 2013-ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் கருணாநிதி, ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்தார். 2004ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ரஜினி கருத்து தெரிவித்தார். அந்தக் கருத்தை ஜெயலலிதா லெட்டர் பேடில் ஜெயலலிதா குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். ஆளுமை மிக்க ஜெயலலிதாவுக்கே அப்போது இவருடைய ஆதரவு தேவைப்பட்டிருந்தது, என்றார்.

நீட் தேர்வு குறித்து ரஜினிகாந்த் எந்தக் கருத்தும் கூறவில்லையே என்று கேட்டபோது தியாகராஜன், “இப்போது சந்தித்தபோது கூட நீட் தேர்வு குறித்துப் பேசினார். தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்தது தவறு என்று ரஜினி கூறினார் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு கூறினார் கராத்தே தியாகராஜன்

Leave a Response