
ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 85 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி துவக்க வீரர்கள் டி காக், வோஹ்ரா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி- டி வில்லியர்ஸ் ஜோடி டெல்லி அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர்.
30 ரன் எடுத்திருந்த நிலையில் கோஹ்லி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
