புதிய அமைப்பு தொடங்கினார் பாரதிராஜா

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் தமிழர்களாக ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற
புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டவர்கள் இன்று (ஏப்ரல் 9,2018) காலை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்த அமைப்பின் சார்பாகவே இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது.

அப்போது பேசிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தைக் கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியைத் தள்ளி வைப்பதில் சட்டச் சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.

ஐபிஎல் சம்பந்தமான பேச்சுகள் மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கு சத்யராஜ் பதில் ஆகியனவற்றால் பாரதிராஜாவின் புதிய அமைப்பு கவனம் பெறாமல் போய்விட்டது.

Leave a Response