நகுதற் பொருட்டன்று, இடித்தற் பொருட்டு –நட்பதிகாரம் 79 பட தகவல்கள்.


கண்ணெதிரேதோன்றினாள், மஜ்னு உட்பட சில படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் ஒரு பெரியஇடைவெளிக்குப் பிறகு இப்போது இயக்கியிருக்கும் படம் நட்பதிகாரம்79 படம் பாடல்கள் வெளியீடுவரை வந்திருக்கிறது. ஏப்ரல் 16 அன்று மாலை சென்னை பிரசாத் திரையரங்கில் ஒரு திருவிழா போல பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. தீபக்நீலம்பூர் என்பவருடைய இசையில் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.
மஜூனு படத்தில் நான் ஹாரீஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்திய போது அவருக்கு கிடைத்த வெற்றி எனக்கு மன திருப்தியை தந்தது. அது போலவே தீபக் நிலம்பூர் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும். கண்ணெதிரே தோன்றினாள் படத்திற்கு எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதில் இசையமைத்த தேவா அவர்கள் நட்பதிகாரம் – 79 படத்தில் ஒரு கானா பாடியுள்ளார். அது இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் ஆகும் என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.

திருக்குறளின் 133 அதிகாரங்களில் 79 ஆவது அதிகாரம் நட்பு. அதையே படத்துக்குப் பெயராக்கி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை நட்பை மையப்படுத்தியதாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
நட்பையும் காதலையும் மையப்படுத்தியதோடு இரண்டுகுடும்பங்களுக்கிடையேயான உறவைப்பற்றியும் இந்தப்படத்தில் சொல்கிறார்களாம். இந்தப்படத்தில் ஓநாயும்ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்திருந்த ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வல்லினம் படத்தில் நடித்திருந்த அம்ஜத்கான் நடிக்கிறாராம். ரேஷ்மி, தேஜஸ்வி என நாயகிகளும் இரண்டுபேர் இருக்கிறார்கள். இவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சுசுப்பு, வினோதினி ஆகியோர் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார். சென்னையிலேயே படப்பிடிப்பு நடந்திருந்தாலும் அவருடைய ஒளிப்பதிவில் சென்னை புதிதாகத் தெரியும் என்று சொல்கிறார்கள். ஜெயம்சினிஎண்டர்டெயிண்மெண்ட் என்கிற நிறுவனத்தின் சார்பாக டி.ரவிகுமார் எனும் புதியவர் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் இந்தக்கதை ஆகியனவற்றின் மீதான நம்பிக்கையின் காரணமாகத் தாராளமாகச் செலவு செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள்.

Leave a Response