சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாற காரணம் இவர்தான்..!


பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பன், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை. சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படங்களை அவரது நலம் விரும்பியான ஆர்.டி.ராஜா தயாரித்துவரும் நிலையில் தன்னுடைய நண்பனை இயக்குனராக்கி அழகுபார்க்க, தானும் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. சத்யராஜ் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள். இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் மிக நெருக்கமான இன்னொரு நண்பர் தர்ஷன். தினேஷ் கிருஷ்ணன் நடிக்கிறார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியில் பூஜையுடன் படத்தை துவக்கியுள்ளார்கள். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், ஒரே ஊர்க்காரர்கள். அது தான் முதல் நாள் ஷூட்டிங்கை இங்கு நடத்தியதற்கு முக்கிய காரணம்.

Leave a Response