நாம்தமிழர் கட்சிப் பெண் மது கடத்தினாரா? – விளக்க அறிக்கை

நேற்று பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வரும் பொழுது அனுசூயா என்ற பெண் பிடிப்பட்ட செய்தி நேற்று சில ஊடகங்களில் வந்தது.
அவர் இம்மாவட்டத்தின் மந்திரி எம்.சி.சம்பத்தின் வலது கரமாக இருக்கும் கந்தன் என்பவரின் அண்ணன் தேவனின் மகள். அவரின் கணவர் லெனின் இதே போன்று ஒரு வழக்கில் இப்பொழுது சிறையில் இருக்கிறார். அவர்கள் அனைவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள். ஆனால் நேற்று மதுபாட்டில் கடத்தி கைது செய்யப்பட்டிருக்கும் அனுசூயா என்ற பெண்ணை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை செயலாளர் என்று இன்று முகநூலில் சிலர் பரப்பி வருகிறார்கள்.
அதை முழுமையாக மறுக்கிறோம். கைதுசெய்யப்பட்டிருக்கும் பெண்ணுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. திட்டமிட்டு நாம் தமிழர் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் முகமாகச் செயல்படுபவர்களுக்குக் கடும் கண்டனங்களைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.

-நாம் தமிழர் கட்சி செய்திப்பிரிவு,
தலைமை அலுவலகம்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Response