ஜி.வி.பிரகாஷை கண்டு வியந்த பாலிவுட் இயக்குனர்..!


பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்.. தென்னிந்திய மொழிப்படங்களை தொடர்ந்து கவனித்து வருபவர். அப்படிப்பட்டவர் சமீபத்தில் வெளியான பாலாவின் நாச்சியார் பட டீசரில் ஜி.வி.பிரகாஷை பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

“ஹலோ லிட்டில் ஜீனியஸ்.. என்னப்பா செஞ்சிக்கிட்டு இருக்கே.. நீ வித்தியாசமாகவும் நல்ல ஆளாகவும் தெரியுறயே.. பாலா படம் பண்ணி முடிச்சுருக்க.. உனக்குள்ள எத்தனை ஆச்சர்யம் வச்சிருக்கேப்பா” என்கிற விதமாக ட்வீட் பண்ணியுள்ளார்.

அதற்கு “ஓ மை காட்.. யாரை என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆக நினைத்திருக்கிறேனோ அவரிடமிருந்தே பாராட்டு செய்தியா..? லவ் யூ சோ மச் ப்ரோ..” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்

Leave a Response