தமிழ் இருக்கைக்கு நிதி, முன்னோடியான வேலம்மாள் பள்ளி

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” நிறுவுவதற்கானக தமிழக அரசு பத்துகோடி வழங்கியது. அதைத் தொடர்ந்து நடிகர்கள் சிலரும் நிதி கொடுத்தனர்.

முதன்முறையாக கல்வி நிறுவனமொன்று நிதி வழங்கியிருக்கிறது.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் தமிழ் இருக்கை நன்கொடையாக 25 இலட்சம் கொடுத்திருக்கிறார்.

இன்று 25 இலட்சத்திற்கான காசோலையை,மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களிடம் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்திரு.ஆறுமுகம் உடன் இருந்தார்.

இவர் போன்று மற்ற கல்வி நிறுவனங்களும் நிதி கொடுத்தால் நல்லது.

Leave a Response