ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொன்ன விஜய்

ஏராளமான சர்ச்சைகளுக்குப் பிறகும் விஜய் நடித்த மெர்சல் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.இவ்வளவு சர்ச்சைகள் வந்தபோதும் இதுவரை வெளிப்படையாக விஜய் எதுவும் பேசவில்லை.

இப்போது மெர்சலை மாபெரும் வெற்றி பெறச் செய்த, ஆதரவு கொடுத்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மெர்சல்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப் பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மாபெரும் வெற்றியடைந்துள்ள ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பர்கள்(ரசிகர்கள், ரசிகைகள்), பொதுமக்கள் ஆகிய அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.’மெர்சல்’ திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.

Leave a Response