கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..!


சின்னத்திரையில் செய்தி வாசிப்பளாராக இருந்த, பிரியா பவானி சங்கர், என்பவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து, ‘மேயாத மான்’ படத்தில், வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம், இவருக்கு கோலிவுட்டில் ஒரு நல்ல என்ட்ரியை தேடித்தந்துள்ளது. குறிப்பாக தமிழ்சினிமாவுக்கு இன்னொரு த்ரிஷா கிடைத்துவிட்டார் என சொல்கிறார்கள்.

இந்தநிலையில் பிரியாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல இரண்டாம் பட வாய்ப்பு அமைந்துள்ளது. ஆம். தற்போது இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் ப்ரியா பவானி சங்கர். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ‘கொடி’ படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறாராம்..

Leave a Response