‘மேயாத மான்’ படத்தை பாராட்டிய தனுஷ்..!


அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகர் வைபவ், நடிகை பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் மேயாத மான். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். தீபாவளியன்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல ரேட்டிங் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட பழைய பாணி கதைதான் என்றாலும் கதைசொல்லும் முறையில் கொஞ்சம் புதிய விஷயங்களை கையாண்டு இருந்த விதம் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் தனுஷ், தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். மேலும், இந்த மாதிரியான பார்முலாவுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு’’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Response