“சாவித்திரியாக நடிப்பது சவாலாக இருக்கிறது” ; கீர்த்தி சுரேஷ்..!


நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.. சாவித்ரி ரோலில் நடிப்பது எப்படி இருக்கிறது என கேட்டால் மலைப்பாக பார்க்கிறாராம்.

“கொஞ்சம் அல்ல, நிறையவே சவாலான விஷயம் அது. சாவித்ரி மேடம் ரோலில் நடிக்க, என்னை தேர்வு செய்த போது, அவங்க அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. அவர்கள் நடித்த, மாயாபஜார், திருவிளையாடல், பாசமலர் போன்ற பல படங்களை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் போட்டு பார்த்து ஓரளவு சமாளித்துள்ளேன். அவங்க ரோலில் நடிப்பது, பெருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Leave a Response