சினேகன் கணேஷைவிட ஆரவ்விடம் என்ன சிறப்பு?


நிஜமாகவே தமிழக மக்களின் அறிவு வியக்க வைக்கிறது.( வோட்டு போட்டவர்களின் தீர்மானம்)

ஓவியாக்கு அளவுக்கடந்த ஆதரவு .அதில் எந்த மாற்றமும் இல்லை..real show stealer..கடைசி நொடி வரை..

ஆனால் ஆரவ் வின்னர் .கடைசியில் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பில் எது சிறந்தது என்ற முடிவில் வெகு தெளிவு..

சினேகன், கணேஷை விட ஆரவ் உண்மையானவர் என்று முடிவுக்கு வந்துதான் இந்த வோட்டுகள்.

கேம் என்று வரும்பொழுது அதிகம் அழாமல், ஒதுங்காமல், தனக்கான வேலைகளை ஓவர் எந்து இல்லாமல் ஒரளவுக்கு சரியான அளவில் செய்து, எங்கும் நிதானம், அன்பு தவறவிடாத போட்டியாளர் ..

குறும்படத்தில் அவமானம் ஆகியும், மருத்துவ முத்ததில் மாட்டிக்கொண்டும் நிதானத்தை, மனதை விட்டுவிடவில்லை..

Really strong person in mind..needed for this show. எனவே மக்கள் தெளிவான முடிவில் ஆரவை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

ஓவியா ரியல் வின்னர்..ஆரவ் ஷோ வின்னர்..லாப அறுவடை கமல், துட்டு விஜய் டி.வி க்கு.

கூட்டி கழிச்சு பாருங்க..எல்லாம் சரியா வரும்.

அரசியல் என்று வரும்பொழுது இருப்பவற்றில் நல்லது தேர்ந்து எடுத்து உள்ளதும் புரிகிறது. இதான் ததமிழ்நாடு.. வேறு வழியில்லாவிடில் இப்படிதான் முடிவு.

Leave a Response