
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்த அளவுக்கு தான் மீண்டும் லைம்லட்டுக்குள் வருவோம் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார் ஓவியா. அவருக்கு கிடைத்துள்ள இந்த புதிய செல்வாக்கால் அவருக்கு சில படங்கள் புக்காகி உள்ளன என்று சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஓவியா நடித்து, ரிலீஸாகாமல் கிடப்பில் கிடந்த ஒன்றிரண்டு படங்களையும் தூசி தட்டி, ஓவியாவின் புகழை வைத்து வியாபாரம் செய்யும் பணிகளும் நடக்கின்றன..
அந்த வகையில் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று, ஓவியா நடித்த மலையாளப்படம் ஒன்றையும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர்.. மலையாளத்தில் மனுஷ்ய மிருகம் என்கிற இந்தப்படத்திற்கு போலீஸ் ராஜ்ஜியம் என பெயர் வைத்துள்ளனர். அதற்கு காரணமும் இருக்கிறது இந்தப்படத்தில் பிருத்விராஜும் மறைந்த நடிகர் கலாபவன் மணியும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கிரண் நடித்துள்ள இந்தப்படத்தில் ஓவியா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்


