
பொறம்போக்குச் சொத்த ஆக்ரமிச்சிருக்க கொள்ளக்கூட்டம் – பாகம் பிருச்சு பட்டாப் போட்டு எழுதிக் குடுக்கணும்னு பேச்சுவார்த்த நடத்துது…
உண்மயிலயே அது பொறம்போக்கு இல்ல, நம்ம உரிமைச்சொத்துனு சொன்னா, அந்த செயல் – புயல்கள விட இந்தக் கூட்டம் பரவாயில்ல, அனுபவிச்சிட்டு போகட்டும்னு சொல்றிங்க…
லெக் பீஸ் கிளைமேக்ஸ்
அய்ய, எச்சிக்கலைங்களா…
‘”நமோ” நாராயணா!’ பிச்சயா போட்ட பிரியாணிய ஆளுக்கொரு கவளமா சந்தோசமா திங்கிறத விட்டுட்டு, இந்த “லெக் பீஸ” எனக்கு எழுதிக்குடு ஒனக்கு எழுதாமக்குடு-னு துப்புக்கெட்டதனமா அடுச்சுக்கிறீங்களே, இதுக்குப் பேருதான் “தர்மயுத்தம் 2.0”-வா…???
(கிளைமேக்ஸ் எப்புடி!)
பொங்கிய ராவுகள்
இன்னைக்கு ராத்திரி – இப்ப – மெரினாவுல பெய்யிற மழ, அந்த தியான ராத்திரில மட்டும் பெஞ்சிருந்தா, “மர்மவித்தை 2.0″ அரங்கேறியிருக்கும், ‘”நமோ” நாராயணா!’ ரோலே வேறமாதிரி ஆயிருக்கும்…
இது இயற்க செஞ்ச சதி, இயற்கையா நேர்ந்த சதி இல்ல…
(பஞ்ச் எப்புடி!)
ரகசிய சினேகிதம்
அவருடைய முன்னாள் அடிமைகள் அவருடைய பிறந்த நாளை ரகசியமாய் கொண்டாடுவதன் நாசூக்கான வெளிப்பாடுதான் அவர் சூளுரைத்த அந்த சமாதிக்கு இன்று செய்யப்பட்ட அலங்கார மரியாதை…
-ச.ராஜநாயகம்


