தரமணி – திரைப்பட விமர்சனம்

சராசரி சினிமாத்தனம் இல்லாமல் உண்மையைச் சற்றே உரக்க சொல்லிட்டார் ராம்.

வழிப்போக்கன் ஒருவனின் எதார்த்தமான காதல், அதனால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம இவன் எல்லாம் இவ்வளவு தான்னு சாதாரணமா போச்சு கதை.

ஆனா அவனுக்கு இருந்த பொசசிவ்னஸ்ஸ சரியா சித்தரிக்கலையோன்னு எனக்கு தோணுது. ஊர்ல இருக்கிறவங்க மேல எல்லாம் அவ்வளவு பொசசிவ்னஸ் வராது, இதைத் தவற விட்டுட்டாரு ராம்னு சந்தேகமா இருக்கு. பொசசிவ்னஸ் சப்ஜெக்டா இன்னும் நல்லா கொண்டு போயிருக்கலாம்.

தற்கால ஆண், பெண் உறவு முறை, காதல் வாழ்க்கை, கலாச்சாரம், கையாளும் தன்மைனு பிச்சி உதறி இருக்கிறார் ராம்.

ஆண்ட்ரியா, ஒரு பெண்ணாக, ஒரு மனைவியாக, ஒரு காதலியாக, ஒரு கம்பெனி ஊழியராக, மேலும் ஒரு தாயாக எல்லாப் பாத்திரங்களையும் செம கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

தன மகன் வந்து அம்மா பிட்ச் னா என்னம்மானு கேக்கும்போது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம அந்த வலியை நாசுக்காக காட்டியிருக்கிறார் ராம்.

இன்றைக்கு இருக்கும் நல்ல தரமான பெண்கள் அப்படி தங்கள் வலியை வெளியே காட்டிக்காம மனசுல போட்டுப் போட்டு மெண்டல் ஆயிட்றாங்க, அது ஒரு வகை மெச்சூரிட்டி லெவல் தான்.

தங்க மீன்கள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 4 வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமுதாயத்திற்குத் தேவையான விழிப்புணர்வை இந்தப் படத்தின் மூலமாக அருமையாகக் கையாண்டுள்ளார்.

ரெண்டு நாளைக்கு முன்னே நான் கேட்டேன் தற்கொலை கோழைத்தனமான்னு … இல்லனு சொல்றார் ராம் ….ஒரு பெண்ணாலே ரொம்ப மனஅழுத்தத்தை கையாள முடிவதில்லைங்க.அதான் உண்மை.

நாய்ல என்ன நல்ல நாய்? கெட்ட நாய். கரெக்டா பிஸ்கெட் போட்டா போதும்,

எனக்கேனோ இந்த வரி சரியாப் படலை. நல்ல ஆண்மகன்களை நான் மரியாதையா பாக்குறேன் இது கொஞ்சம் நெருடலா இருக்கு.

கணவனுடன் நல்லா குடும்பம் நடத்தும் ஒரு சிலர் ஒழுக்கம் கெட்டுப் போவதை நியாயப்படுத்துவதா இருக்கு, எனக்கு இதுல உடன்பாடில்லை. ஆண்ட்ரியா போல தனிமைல இருக்கிற பெண்கள் தப்பு பண்ணலாம் ஆனா இதென்ன டிசைன் ,
எனக்கு அது பிடிக்கல.

தவறாம பாருங்க நெறய புரிஞ்சிக்க வேண்டிய விஷயம் இருக்கு.
இன்னைக்கு நடக்குற இந்த வாட்ஸப் மெசேஜ் எப்படி எல்லாம் தப்பாப் போகுதுனு தெரிஞ்சிக்கங்க, திருந்துங்க.

– பிரியாகுருநாதன்

2 Comments

Leave a Reply to Priya Gurunathan Cancel reply