பேரன்பு படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்த கெளரவம்..!


தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படத்தில் மம்முட்டி, சாதனா, திருநங்கை அஞ்சலி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தற்போது, இந்தப்படம் ரோட்டர்டாமில் நடைபெறும் 47வது நெதர்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதுதவிர மேலும் சில உலக பட விழாக்களில் திரையிடப்பட இருக்கிறது. படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார்.

‘தங்க மீன்கள்’ படம் போன்றே இந்தப் படத்திலும் தந்தைக்கும், மகளுக்குமான உறவை சொல்கிற கதை. பாசமுள்ள தந்தையாக மம்முட்டியும், மகளாக தங்க மீன்கள் சாதனாவும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.

Leave a Response