ஓவியாவுக்குப் பதிலாக பிரியாபவானிசங்கரா? – அவரே சொல்லும் பதில்

நடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, அவருடைய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு ஓவியா ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் வேறொருவரைக் கொண்டுவர விஜய் தொலைக்காட்சி முயல்கிறது.

விஜய் தொலைக்காட்சியிலேயே ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்த நடிகையும், மாடலுமான பிரியா பவானி சங்கர் பல மாதங்களுக்கு முன்பு, தான் நடித்த தொடரில் இருந்து சில காரணங்களுக்காக விலகினார். இப்போது, ‘மேயாத மான்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் வரும் வாரத்தில் ‘பிக் பாஸ்’ வீட்டில் நுழையவிருக்கிறார் பிரியா பவானி சங்கர் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அது குறித்து அவர் பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கில் செய்தி வெளியாகியிருக்கிறது.

அதேசமயம் அவருடைய முகநூல் கணக்கில் அதற்கு நேர்மாறாக பதிவு வந்திருக்கிறது. அதில், என்னது நான் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேனா? என் வீட்டிலேயே என்னால பத்துநாள் சும்மா இருக்க முடியாது. அங்கு நான் போகப்போவதில்லை என்பதற்காகவே இந்தப் பதிவு என்று வந்திருக்கிறது.

Leave a Response