‘வி.ஐ.பி-2’ ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் இதுதான்..!


தனுஷ் – அமலா பால் ஆகியோரை வைத்து 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூலை-28 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ ரிலீஸ் தேதி தற்போது ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போனதாக இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட விரும்பினாலும் கோட்ட, தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளுக்கான தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற வேண்டியதாக போய்விட்டது என சொல்லப்படுகிறது.

Leave a Response