ராமின் ‘தரமணி’க்கு விரைவில் விடிவுகாலம்..!


‘தங்கமீன்கள்’ என்கிற அற்புதமான படத்தை கொடுத்த இயக்குனர் ராம், தனது அடுத்த படத்தை கொடுக்க இவ்வளவு காலமா எடுத்துக்கொள்வார் என ரசிகர்கள் அவர்மீது உரிமையுடன் கோபத்தில் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம்.. அதேசமயம் நிறைய நாட்கள் ஆனாலும் அவரிடமிருந்து வெளிவரும் படைப்பு தரமாக இருக்கும் என்பதால் காத்திருப்பதில் தவறில்லை என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது..

அந்தவகையில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ‘தரமணி’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். உலகமயமாக்கல் ஆண், பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் தரமணி படத்தின் கதைக்களம்.

ராம் இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக மம்முட்டியை வைத்து பேரன்பு என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.. ஆக த்காரமனிக்கு என்னதான் ஆச்சு என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சமீபத்தி இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வரும் ஆகஸ்ட்-11ல் ’தரமணி’ ரிலீஸாகும் என அறிவித்துள்ளார்.

Leave a Response