ஸ்கெட்ச், ஸ்பைடர், மெர்க்குரி, பார்ட்டி ;; மீண்டும் தமிழ்சினிமாவில் தலைதூக்கும் ஆங்கிலம்..!


தமிழ்சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களுக்கு பொதுவாக வரிவிலக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகத்தான் தமிழில் டைட்டில் வைத்து வந்தார்கள்.. ஆனால் வரும் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வர இருப்பதால் தமிழக அரசின் கேளிக்கை வரி எல்லாம் காணாமல் போய், இனி ஜி.எஸ்.டி வரிதான் கோலோச்சப்போகிறது.

அந்த வரிக்கு தமிழில் டைட்டில் வைத்தாலும் சரி, ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தாலும் சரி ஒரேமாதிரியான வரிவிதிப்பு தான். இதனை உணர்ந்துதான் விக்ரம் படத்திற்கு ‘ஸ்கெட்ச்’ என்றும் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் படத்திற்கு ‘ஸ்பைடர்’ என்றும் ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துவிட்டார்கள்..

சென்னை-28 இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘பார்ட்டி என தலைப்பை ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டார் வெங்கட்பிரபு.. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.

Leave a Response