அவசரநிலைக் காலத்தில் துணிகரமாக உரையாற்றியவர் – இரா.செழியனுக்கு பழ.நெடுமாறன் புகழாரம்


மூத்த அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.வேலூர் தனியார் கல்லூரியில் தங்கியிருந்த இரா. செழியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 4 முறை மாநிலகளவை உறுப்பினராகவும் இரா, செழியன் இருந்துள்ளார்.
இரா. செழியன் நாவலர் நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவார்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்பழ.நெடுமாறன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

மூத்த தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலைக் காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவு கூரப்படும். அவரின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response