இலஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன் கைது, வாங்கியவர் யார்? – சுபவீ கேள்வி

இரட்டைஇலை சின்னம் பெற இலஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 25 அன்று 4-வது நாளாக டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார் டிடிவி தினகரன். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்பு அவரும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன் இருவரையும் நள்ளிரவில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

தினகரன் கைதுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் சொல்லப்படுகின்றன.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலர், தன்னுடைய டிவிட்டர் பதிவில், லஞ்சம் வாங்கியவரைத்தானே முதலில் கைது செய்வார்கள்? லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரனும், இடைத்தரகரும் கைது . வாங்கியவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவுடன் தோழமையாக இருக்கும் இவர் எழுப்பியிருக்கும் கேள்வி அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Response