
நடிகர் சந்தானம் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சந்தானத்துக்கு ஜோடியாக இந்தப் படத்தில் மராத்தி நடிகை வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஆனந்த்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நாகேஷுக்கு ‘சர்வர் சுந்தரம்’ படம் எப்படி பெயர் வாங்கி தந்ததோ அதுபோன்று இந்த படம் நடிகர் சந்தானத்திற்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். சந்தானத்தின் வளர்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது நண்பரான சிம்பு தான். அதனால் இந்தப்படத்தின் டீசரை பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவை வெளியடச்சொல்லி சந்தானம் கோரிக்கை வைக்க, சத்ர்கு சிம்புவும் ஒப்புக்கொண்டுள்ளார்.


