‘2.O’ ஷூட்டிங்ஸ்பாட்டில் ஆயுதபூஜை கொண்டாடிய சூப்பர்ஸ்டார்..!


சூப்பர்ஸ்டார் ரஜினியை பொறுத்தவரை, ஓய்வு எடுக்கவேண்டும் என நினைத்தால் உடனே இமயமலை வெளிநாடு என எங்கேயாவது கிளம்பிவிடுவார் என்பது தெரியும்.. அதேபோல ஷூட்டிங் இருக்கிறது என்றால் அது தீபாவளியா, பொங்கலா என்றெல்லாம் பார்க்கமாட்டார்.. வழக்கமான நாள் போல ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு டான் என்று ஆஜராகி விடுவார்.. ரஜினியைப்பற்றி ஆரம்பத்தில் இருந்தே அறிந்தவர்களுக்கு இது பெரிய ஆச்சர்யம் எதையும் தராது.

அதேபோலத்தான் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் ஒரு பக்கம், தனது பேரன் யாத்ராவின் பிறந்தநாள் இன்னொரு பக்கம் என இருந்தாலும் கூட, ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்துவரும் ‘2.O’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினி, படப்பிடிப்பு தளத்திலேயே ஆயுதபூஜையையும் கொண்டாடினார். அவருடன் நாயகி எமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ஆயுதபூஜையை கொண்டாடினர்கள்.

Leave a Response