நள்ளிரவில் நடிகையுடன் கொண்டாட்டம் – சர்ச்சையில் தமிழக முதல்வர்

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை ஜூன் 22 அன்று கொண்​டாடி​னார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பிறந்​த​நாள் என்​ப​தால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்​பாகக் கொண்​டாடினர்.

அக்கட்சியினர் சார்பில் கோயில்​களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்​பட்​டன.பொது​மக்​களுக்கு பல்​வேறு நலத்​திட்ட உதவி​களை​யும் தவெக​வினர் வழங்​கினர்.இரத்த தானம்,அன்னதானம்,மருத்​துவ முகாம்கள் உள்​ளிட்ட
நிகழ்ச்​சிகளுக்கும் ஏற்​பாடு செய்​திருந்தனர்.

முதல்​வரின் பிறந்​த​நாளை ​ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில்,திரைத்துறையில் நடிகராக இருந்து,இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு,அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

இது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏற்கெனவே விஜய் மனைவி,ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று சொல்லித்தான் மணவிலக்குக் கேட்டிருக்கிறார்.

இந்நிலையில்,நடிகை த்ரிஷாவின் இந்தப்பதிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் நடிகையுடன் தமிழக முதல்வர் கொண்டாட்டம்,இது சரியா? முறையா? என்கிற விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் நிறைந்து கிடக்கிறது.

Leave a Response