
பஞ்சாப் மாநிலத்திலுள்ள 8 மாநகராட்சிகள்,75 நகராட்சிகள் மற்றும் 20 நகர பேரூராட்சிகளுக்கான தேர்தல் மே 26 அன்று நடைபெற்றது.
ஆளும் ஆம் ஆத்மி,காங்கிரசு,பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது.
இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
நேற்று மாலை நிலவரப்படி, ஆம் ஆத்மி சுமார் அறுநூறு இடங்களில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.அதற்கடுத்து சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 220 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.காங்கிரசு 184 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளது.சிரோமணி அகாலிதளம் 137 இடங்களில் வென்று நான்காமிடம் பிடித்தது. 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஐந்தாமிடத்துக்குப் போயிருக்கிறது பாஜக.
இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியதாவது….
ஆளும் பாஜக அமலாக்கத்துறையை வைத்து எங்களை ஒடுக்க நினைத்தது.இப்போது மக்கள்,இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் அக்கட்சிக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று கூறினர்.அதோடு,இந்தத் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடந்தது.அதனால் பாஜகவால் வாக்குகளைத் திருட முடியவில்லை என்றும் வெளிப்படையாகப் பேசியிருக்கின்றனர்.
இதன்மூலம்,வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து வாக்குகளைத் திருடித்தான் பாஜக வெற்றிகளைச் சுவைத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


