
ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பற்றிய செய்திகள் வருகின்றன.
இன்றைய அதிர்ச்சி…
பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரித்து ரூ.785-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிப்ரவரியில் 3 ஆம் முறையாக எரிவாயு உருளை விலை உயர்ந்திருக்கிறது.இம்முறை ரூ.25 விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.785 லிருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி உயர்ந்துகொண்டே போனால் மக்கள் எப்படி வாழ்வது?
