பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் படம், 36 வயதினிலே.


மொழி படத்துக்குப் பிறகு நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘36 வயதினிலே’. மே 15 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படுவதோடு வசூலிலும் வெற்றி பெறும் என்கிறார்கள்.
மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெற்றி பெற்ற “ஹவ் ஓல்டு ஆர் யூ” படத்தின் தமிழ்ப்பதிப்பு என்றாலும் தமிழில் வசனம் எழுதியிருக்கும் விஜியின் கைவண்ணத்தில் படத்துக்குப் புதிய பொலிவு கிடைத்திருக்கிறதாம்.
பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் இந்தப் படத்தில் ஜோதிகா வுடன், ரகுமான், இளவரசு, நாசர், அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ருஸ் தான் தமிழிலும் இயக்கியிருக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேரடியாகப் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கும் சூர்யா வுக்கு முதல் படமே பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
படைப்பாளிக்கு முழு சுதந்திரம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படும். இந்தப்படத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. படத்துக்குத் தமிழில் தாரகை உட்பட வெவ்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாம். ஆனால் இயக்குனரோ 36 வயதினிலே என்று வைப்பதில் உறுதியாக இருந்தாராம். எனவே அந்தப் பெயரே இருக்கட்டும் என்று சூர்யா சொல்லிவிட்டாராம். எனவே வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.

Leave a Response